LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, March 31, 2020

கொரோனாவின் அகோரம்: அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸில் என்றுமில்லாத உயிரிழப்பு..!

மனிதப் பேரழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்தும் தீவிரமாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

நூற்றுக்கணக்கான நாடுகளில் குறித்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலகம் முழுவதும் மொத்தமாக 7 இலட்சத்து 85 ஆயிரத்து 807 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 718 பேரை வைரஸ் காவுகொண்டுள்ளதுடன் மொத்தமாக இதுவரை 37 ஆயிரத்து 820 பேர் உலக அளவில் மரணித்துள்ளனர்.

மேலும், ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 659 பேர் குணமடைந்து வெளியேறியுள்ள போதிலும் தற்போது உயிரிழப்புக்களின் வீதம் அதிகரித்துச் செல்கின்றமை பெரும் அச்சத்தையே ஏற்படுத்தி வருகின்றது.

இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரேநாளில் ஸ்பெயினில் 913 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு மொத்தமாக 7 ஆயிரத்து 716 பேர் மரணித்துள்ளனர்.

இந்நிலையில் ஸ்பெயின் பெரும் நெருக்கடியை தற்போது எதிர்கொண்டுள்ளது. நேற்று மட்டும் அங்கு 7 ஆயிரத்து 846 பேர் புதிய நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். மொத்த நோயாளர்கள் 87 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதுடன் அதி தீவிர சிகிச்சையில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.

கொரோனா பாதிப்பால் பேரிழப்பைச் சந்தித்து வரும் ஸ்பெயினுக்கு சுமார் 15 தொன் அளவிலான மருத்துவப் பொருட்களை சீனா வழங்கியுள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்பெயின் பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்கரிட்டா ரோபில்ஸ், ஸ்பெயின் இராணுவ விமானம் திங்களன்று சீனாவிலிருந்து சுமார் 15 தொன் மருத்துவப் பொருட்களுடன் நாட்டுக்கு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.



இதேவேளை, தொடர்ந்தும் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துரும் இத்தாலியில் நேற்று மட்டும் 812 பேர் மரணித்துள்ளதுடன் உலக அளவில் அதிக உயிரிழப்பைச் சந்தித்துள்ள இந்நாட்டில் இதுவரை மொத்த உயிரிழப்பு 11 ஆயிரத்து 591 ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும், பாதிப்பு எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில் அங்கு அவசர சிகிச்சையில் நான்காயிரம் பேர்வைரை உள்ளனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஏப்ரல் 3ஆம் திகதிக்குப் பிறகும் நீட்டிக்கப்படும் இன்றியமையாதது என அந்நாட்டின் உட்துறை அமைச்சர் பிரான்சிஸ்கோ பொக்கியா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டிலுள்ள அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்பவே விரும்புவதாகக் கூறிய அவர், எனினும், கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்தபிறகு படிப்படியாக ஊரடங்கு இரத்துச் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அமெரிக்காவில் அசுர வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி தற்போது உயிரிழப்புக்கை பெரும் எண்ணிக்கையில் ஏற்படுத்தி வருகின்றது.

இதுவரை ஏற்படாத பதிவாக அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 573 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் புதிய நோயாளர்களும் ஒரேநாளில் 20 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்து மொத்தம எண்ணிக்கை ஒரு இலட்சத்து 63 ஆயிரத்து 844 ஆகக் காணப்படுகிறது. மொத்த உயிரிழப்பு 3ஆயிரத்து 156 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் பிரான்சிலும் கடும் பாதிப்பை கோரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகின்றது. அங்கு ஒரேநாளில் 418 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்தமாக 44 ஆயிரத்து 550பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புக்குள்ளாகி தீவிர சிகிச்சையில் உள்ளனர். பிரான்சில் மொத்த உயிரிழப்பு 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

மேலும், பிரித்தானியாவில் 180 உயிரிழப்புக்கள் நேற்று மட்டும் பதிவாகியுள்ளதுடன் மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 408 ஆக உள்ளது. மேலும் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஜேர்மனியில் நேற்று 104 உயிரிழப்புக்களும், ஈரானில் 117 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதுடன் குறித்த நாடுகள் தொடர்ந்தும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்களைச் சந்தித்து வருகின்றன. ஜேர்மனியில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரைவஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதைன விட ஏனைய பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சுவிட்சர்லாந்தில் 59 பேரும், நெதர்லாந்தில் 93 பேரும், பெல்ஜியத்தில் 82 பேரும் மரணித்துள்ளதுடன் துருக்கி, சுவீடன், ஆஸ்ரியா, கனடா, போர்த்துக்கல், பிரெஸில், ரோமானியா உட்பட மத்திய கிழக்கு நாடுகளிலும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7