தீவிரமடைந்து வருவதுடன் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்துப் 10 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், உலகம் முழுவதும் இன்று ஒரே நாளில் ஆயிரத்து 878 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஜெர்மனியில் 510 பேருக்கும் அண்டை நாடான ஆஸ்திரியாவில் 139 பேருக்கும், மலேசியாவில் 117 பேர், அமெரிக்காவில் 113 பேர், அவுஸ்ரேலியாவில் 110 பேர், இஸ்ரேல் 90 பேர், தென்கொரியாவில் 93 பேர் மற்றும் டென்மார்க்கில் 67 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிப்புக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 2 இலட்சத்து 99 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 82 ஆயிரத்து 813 பேர் குணமடைந்துள்ளதாகவும், ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 276 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் 50 மாநிலங்களிலும் கொரோனா பரவியுள்ளது. அந்த நாட்டின் நியூயார்க், வொஷிங்டன் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
இந்நிலையில் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை நூறை கடந்து 116ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பாதித்தோரின் எண்ணிக்கையும் 6 ஆயிரத்து 524ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 12 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்து சீனாவில் 11 பேரும், அமெரிக்காவில் 7 பேரும், தென்கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் தலா 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல் பங்களாதேஷ், நோர்வே, அவுஸ்ரேலியா, பிரேசில், லக்சம்பேர்க், அல்பேனியா, மால்டோவா நாடுகளில் தலா ஒருவரும் என மொத்தம் 43 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கையும் சேர்த்து, உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 10ஆக உயர்ந்துள்ளது.