LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, March 1, 2020

வடக்கில் கொள்ளை, துஷ்பிரயோகங்களில் ஈடுபடும் கும்பல்: கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஐவர் கைது!

யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணம் முழுவதும்
வீடுகளுக்குள் புகுந்து கைக்குண்டுகள், வாள்களைக் காட்டி கொள்ளையிடுவது பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த நால்வர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள்கள், ஆயுதங்கள் உட்பட்டவை இன்று (சனிக்கிழமை) கைப்பற்றப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

அச்சுவேலியில் கொள்ளைக் கும்பல் ஒன்று பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.எஸ்.சேனாதீரவின் உத்தரவில் சிறப்பு பொலிஸ் பிரிவு விசாரணைகளை முடக்கிவிட்டது.

அதனைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய தேடுதல் மற்றும் விசாரணையில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 கைக்குண்டுகள், 2 வாள்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.

இந்தக் கும்பல் சாவகச்சேரி, சுன்னாகம், அச்சுவேலி, கோப்பாய் மற்றும் மன்னார் பொலிஸ் பிரிவுகளில் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி நகைகளைக் கொள்ளையிட்டுள்ளது. மேலும் பெண்கள் உள்ள வீடுகளில் பாலியல் துன்புறுத்தல்களையும் இந்தக் கும்பல் செய்துள்ளது.

கொள்ளையிட்ட 37 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகளை நெல்லியடியிலுள்ள நகைக் கடையில் விற்பனை செய்துள்ளனர். கொள்ளையிட்ட நகை எனத் தெரிந்தும் அவற்றை வாங்கிய நகைக் கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளைக் கும்பலின் முக்கியஸ்தர் ஏழாலையைச் சேர்ந்தவர் எனவும் ஏனையோர் சிறுப்பிட்டி, சுன்னாகம், அச்சுவேலிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கும்பல் வடக்கு மாகாணம் முழுவதும் இயங்குகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 முதல் 4 பேர்வரை உள்ளனர். அவர்கள் ஒரு குழுவாக இணைந்து தமது இடங்களில் கொள்ளைகளில் ஈடுபடுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் ஐவரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் இன்று இரவு முற்படுத்தப்படவுள்ளனர். அவர்களை 48 மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7