LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, March 5, 2020

செயற்கைக் கோளை விண்ணில் ஏவுவதை ஒத்திவைத்தது இஸ்ரோ!

ஜிசற்-1 என்ற (GISAT-1 ) செயற்கைக் கோள் நாளை
விண்ணில் செலுத்தத் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் தொழில்நுட்பக் காரணங்களால் நிற்போடப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எஃப்-10 ரொக்கெற் மூலம் விண்ணில் இந்த செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்கான செயற்கைக் கோள்களை இஸ்ரோ நிறுவனம், பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி. வகை ரொக்கெற்றுகளின் உதவியுடன் விண்ணில் செலுத்தி வருகிறது.

இதன்படி தற்போது, புவிக் கண்காணிப்பு, கடல் ஆய்வு, விவசாயம் உள்ளிட்டவற்றிற்குப் பயன்படும், ‘ஜிசற்-1’ என்ற அதிநவீன செயற்கைக்கோளை  இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

மொத்தம், 2,268 கிலோ எடை கொண்ட ஜிசற்-1 செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டுள்ள நவீன கமெராக்கள், புவியின் பரப்பை மிகத் துல்லியமாக படம் எடுத்து இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும்.

மேலும் வானிலை நிலவரங்களைக் கண்காணித்து, புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர் காலங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவும்.

இந்நிலையில் இந்த செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7