உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.
திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது.
வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறைச் சம்பவங்களில் தலைமைப் பொலிஸ் அதிகாரி, உளவுத்துறை அதிகாரி உட்பட 44 பேர் உயிரிழந்ததாக முன்னர் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வன்முறை சம்பவங்களில் சிக்கி நூற்றுக் கணக்கானோர் காயமடைந்திருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்படி, டெல்லி ஜி.டி.பி. மருத்துவமனையில் 44 பேரும், ஆர்.எம்.எல். மருத்துவமனையில் 5 பேரும், எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 53 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.