உள்ளாக்கப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக வவுனியா ஊடக அமையத்தின் தலைவர் எம்.ஜி.ரெட்னகாந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “பிரபாகரனுடைய படத்தையும் அவர் சார்ந்த விடுதலைப் புலிகளின் கட்டுரையை வெளியிட்டதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வடக்கில் சில ஊடகவியலாளர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தென்னிலங்கையில் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி கட்சியைச் சேர்ந்த முசாமில் போன்ற தென்னிலங்கை அரசியல்வாதிகளோ மற்றும் வட பகுதி அரசியல்வாதிகளோ பிரபாகரனை வைத்து அரசியல் செய்யும்போது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கண்டுகொள்வதில்லை.
ஆனால் ஊடகவியலாளர்கள் இவ்வாறான செய்திகளை வெளியிடும்போதும் பெயர்களை வெளியிடும் போதும், விடுதலைப் புலிகளின் கட்டுரைகள் பயன்படுத்தப்படும் போதும் அவர்களை அழைத்து மறைமுகமான மிரட்டலை மேற்கொள்வது கண்டனத்துக்குரியது.
மேலும், இச்செயற்பாடானது ஊடகவியலாளரின் கருத்துச் சுதந்திரத்திற்கு தடை போடுவதாகவே அனைத்து ஊடகவியலாளர்களும் கருதுகின்றோம். ஊடகம் இன்றியமையாத விடயமாக உள்ளதுடன் இலங்கையில் ஊடகத்துறை மறைமுகமாக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதை நாங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என அவர் தெரிவித்தார்.