தொடர்ந்து அதிகரித்து வருவதால், வன்கூவர் சர்வதேச விமான நிலையம் ஏற்கனவே அதன் தாக்கத்தை உணர்ந்து 2020ஆம் ஆண்டு பெரிய இழப்புகளுக்குத் தயாராகி வருகிறது.
இந்த ஆண்டு வன்கூவர் சர்வதேச விமான நிலைய முனையங்கள் வழியாக 1.3 மில்லியன் பயணிகள் கடந்து செல்வார்கள் என்று விமான நிலையம் கணித்துள்ளது.
ஆயினும், மந்தமான முன்னறிவிப்பு இருந்தபோதிலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் அதன் சர்வதேச முனையங்களில் ஒன்றிற்கு பல மில்லியன் டொலர் விரிவாக்கத்தின் மத்தியில் வன்கூவர் சர்வதேச விமான நிலையம் இன்னும் உள்ளது.
கடந்த பெப்ரவரி மாத இறுதியில், கனடா மற்றும் சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு இடையிலான அனைத்து விமானங்களையும் ஏப்ரல் வரை ரத்துச் செய்வதாக எயார் கனடா அறிவித்தது.
இந்தச் சரிவிற்கு கனடா-சீனா உறவுகள் ஹொங்காங் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போயிங் 737 விமானங்கள் அனைத்தும் காரணிகளாக இருப்பதாக விமான நிலைய தலைமை நிர்வாக அதிகாரி கூறுகிறார்.