மேற்கொள்ளப்பட்ட விடயத்தின் உண்மையை மறைத்து தற்போதைய அரசாங்கத்தின் மீது பழியை சுமத்த முயற்சிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட சர்வதேச மீன்பிடிப் கலங்களின் செயற்பாடு காரணமாக தொழில்துறை பாதிக்கப்படுவதாக தெரிவித்து டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்தின் முன்பாக அகில இலங்கை பல நாள் கலங்களின் உரிமையாளர்களினால் நேற்றைய தினம் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் குறித்த இடத்திற்கு சென்று, வழங்கிய வாக்குறுதிக்கு அமைய சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் இன்று (புதன்கிழமை) சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது.
இதன்போது கடந்த கால ஆட்சியில் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட சர்வதேச மீன்பிடிக் கலங்களின் செயற்பாட்டினால் எதிர்கொள்ளும் பாதிப்புக்களை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கு விசேட குழு ஒன்றினை அமைப்பதற்குவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர் இந்து ரத்நாயக்கா தலைமையில் சர்வதேச கடலில் மீன்பிடியில் ஈடுபடும் உள்ளூர் கலங்களின் உரிமையாளர்களின் பிரதிநிதிகள் இருவர் உள்ளடங்கலாக துறைசார் நிபுணர்கள் அடங்கிய குழுவினை அமைப்பதற்கு அமைச்சரினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச கடலில் மீன்பிடியில் ஈடுபடும் உள்ளூர் கலங்களுக்கு வி.எம்.எஸ். என்படும் கலங்களை கண்டறியும் முறைமை மற்றும் கடலுணவுகளை தரையிறக்கும் வரையில் பாதுகாக்கும் குளிரூட்டல் வசதி போன்றவை பொருத்தப்படும் வரையான தற்காலிகமாக அனுமதிப் பத்திரங்களை உடனடியாக வழங்குமாறு அமைச்சு அதிகாரிகளுக்கு அமைச்சரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கையில் பதிவு செய்யப்பட்ட சர்வதேச மீன்பிடிக்;கலங்களினால் இலங்கைக்கு கொண்டு மீன்கள் வரப்படும்போது முறைகேடுகள் நடைபெறுவதாகவும் அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் கருத்து முன்வைக்கப்பட்டது.
மேலும், தற்போது 35 சர்வதேசத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மீன்பிடிக் கலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில்> அதனை மீண்டும் புதுப்பித்து கொடுக்க கூடாது என்ற கோரிக்கை மீனவர் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், அமைக்கப்பட்டுள்ள குழுவின் ஊடாக இரண்டு வார காலப் பகுதிக்குள் இலங்கை கடற்றொழிலாளர்கள் திருப்தியடையும் வகையிலும் மக்களுக்கு நியாயமான விலையில் தரமான கடலுணவுகள் கிடைக்கும் வகையிலும் அந்நிய செலாவணியை அதிகரிக்கும் வகையிலும் தீர்வினை கண்டறிய முடிமென தெரிவித்தார்.
இதன்போது முன்னாள் எதிர்க் கட்தித் தலைவர் சஜித் பிரேமதாச ஊடக சந்திப்பில் வெளிநாட்டு மீன்பிடிக் கலங்கள் ஊடாக உள்ளூர் மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்வதாக வெளியிட்ட கருத்தினை சுட்டிக் காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த 35 வெளிநாட்டு மீன்பிடிக் கலங்களுக்குமான அனுமதி கடந்த ஆட்சிக் காலத்திலேயே வழங்கப்பட்டது என்ற விடயத்தை சுட்டிக்காட்டினார்.
சஜித் பிரேமதாச தமது ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த விடயத்தின் உண்மையை மறைத்து தற்போதைய அரசாங்கத்தின் மீது பழியை சுமத்த முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினர்.