அத்துடன், தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 17ஆம் திகதி விமானம் மூலம் சென்னைக்கு சென்ற 21 வயதுடைய அயர்லாந்தைச் சேர்ந்த மாணவனுக்கே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவன், விமான நிலையத்தில் இருந்து நேரடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, இந்தியாவில் மொத்தமாக கொரோனா வைரஸினால் 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.