உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “புதிய இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு மாற்றுத்திறனுள்ள இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி சிறுவர்களின் பங்களிப்பும் அவசியமானது.
தொழில்துறை, சேவைத்துறை அல்லது விளையாட்டுத் துறையாக இருந்தாலும் மாற்றுத்திறனாளிகளின் திறமைகள் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகின்றன. அனைத்து மக்களுக்கும் நன்மை மற்றும் நீதி கிடைப்பதை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
தற்போதைய மத்திய பாஜக அரசு கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 9 ஆயிரம் நலத்திட்ட முகாம்களை அமைத்து அனைவருக்கும் தேவையான நலத்திட்டங்களை வழங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.