தெலுங்கானாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ள நிலையில் மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்திற்கு அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மக்கள் வருவதால் இந்நோய் வேகமாகப் பரவுவதுடன் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதும் சிரமமாக உள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக தெலங்கானா மற்றும் ஆந்திராவிலிருந்து ஹைதராபாத்திற்குள் நுழைய மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்றும், வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.