இராணுவத்தினர் வெளியேறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Al-Qaim இராணுவத்தளம் உள்ளிட்ட 3 தளங்களிலிருந்து எதிர்வரும் இரண்டு வாரங்களில் இவர்கள் வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈராக்கிலுள்ள அமெரிக்காவின் 8 தளங்களின் 3 தளங்களிலிருந்து வௌியேறும் இந்த நடவடிக்கையானது, அந்தநாட்டிலிருந்து அமெரிக்க இராணுவத்தின் பிரசன்னத்தைக் குறைக்கும் சமிக்ஞையாக பார்க்கப்படுகின்றது.
ஈரான் மற்றும் ஈராக்கிய அரசாங்கத்துடனான பதற்றநிலை அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈராக்கின் இராணுவத் தளங்களிலிருந்து வெளியேறும் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.