மக்களுக்கு உதவ, வின்னிபெக் பொலிஸார் முன்வந்துள்ளார்.
2019ஆம் ஆண்டில் கனேடியர்களுக்கு மொத்தமாக 3.2 மில்லியன் டொலர் செலவாகும் வங்கி புலனாய்வாளர் முறைகேட்டில், கிட்டத்தட்ட 1,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
மோசடி மற்றும் அடையாள திருட்டு பற்றிய தகவல்களை சேகரித்து பகிர்ந்து கொள்ளும் கூட்டாட்சி நிறுவனமான கனடிய மோசடி எதிர்ப்பு மையத்தின் புள்ளிவிபரங்கள் இதனை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த தொகையில் 1 மில்லியன் டொலர்கள் மானிட்டோபர்களிடமிருந்து வெளிவந்தது என்று பொலிஸார் கூறுகின்றனர்.