கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் 3385 பேர் உயிரிழந்துள்ளதுடன், 98ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது.
முதலில் கேரளாவை சேர்ந்த 3 பேரை வைரஸ் தாக்கியுள்ளதாக கண்டறியப்பட்ட நிலையில், தற்போது 29பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து குறித்த வைரஸ் காரணமாக இதுவரை முப்பதிற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.