இந்நிலையில், நாளை (திங்கட்கிழமை) 6 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படுவதால் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மேலும், புதுக்குடியிருப்பு பொதுச்சந்தை மற்றும் நகர் கடைத் தொகுதிகள், உடையார்கட்டு பொதுச்சந்தை, விசுவமடு பொதுச்சந்தை, திருமுருகண்டி கடைத் தொகுதிகள் மற்றும் ஆலய வளாகம் ஆகிய பகுதிகளிலும் தொற்று நீக்கல் நடவடிக்கை இடம்பெற்றது.
அத்துடன், மாங்குளம் சந்தை மற்றும் நகர்ப்புற கடைத் தொகுதிகள், ஒட்டுசுட்டான் நகர்புற கடைத் தொகுதிகள் மற்றும் பொதுச்சந்தை, கற்சிலைமடு பொதுச்சந்தை ஆகிய பகுதிகளிலும் பிரதேச சபையினரால் தொற்று நீக்க மருந்துகள் விசிறப்பட்டன.