வரையிலான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
பாடசாலைக்கு இன்று (வியாழக்கிழமை) சமூகமளித்திருந்த 5 மற்றும் 8 ஆம் தர மாணவர்களின் உடநிலையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது.
இதனை அவதானித்த பாடசாலை நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரையும் உடனடியாக மாமடு பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் சிலர் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
ஒரு தொகுதியினர் மாமடு பிரதேச வைத்தியசாலையிலும் 11 மாணவர்கள் வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த சம்பவம் உணவு விசமானமையா அல்லது வேறு ஏதும் சூழலியல் காரணங்களா என்று தெரியாத நிலையில் மாமடு பொலிஸார் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.