சிறைக் கைதி ஒருவர் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளமை மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நீதித் துறை ஊடகப் பேச்சாளர் குலாம் ஹுசைன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்
எனினும், ஐந்து வருடங்களுக்கு மேலதிகமாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் விடுவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, ஈரானில் இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதோடு, இரண்டாயிரத்து 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 435 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச ரீதியில் இதுவரை மூவாயிரத்து 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 92 ஆயிரத்து 862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.