இதனடிப்படையில், ஏற்கனவே 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 560 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சட்டசபையில் முதலமைச்சர் இன்று உரையாற்றுகையில்,
“100 ஆண்டுகளில் சந்தித்திராத சவால்களை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் குறித்து வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தொற்று அறிகுறியுடன் யாராவது இருந்தால் பொதுமக்கள் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். கொரோனா தொற்றுக்கான அறிகுறியுடன் இருப்பவர்கள் அரசுக்கு தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தமிழக மக்கள் அளிக்கும் ஆதரவுக்கு நன்றி. பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று மக்கள் தகுந்த ஒத்துழைப்பு அளித்தனர்.
கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் போதிய வதிகள் உள்ளன. மத்திய மாநில அரசுகள் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி வருகிறன.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நிலையில் தற்போது கூடுதலாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் ஒரு உயிரைக்கூட இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.