LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, March 1, 2020

மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணியின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 50 இலட்சம் இழப்பீடு!

தங்காலை, கலமிட்டியா பிரதேசத்தில் மீன்பிடித் துறைமுகம்
அமைக்கும் பணியின்போது பாதிக்கப்பட்ட கரைவலை உரிமையாளர்கள் 21 பேருக்கு தலா 50 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கான காசோலைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.

டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, சானக மற்றும் அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, கடற்றொழிலாளர்களுக்கு காலநிலைத் தகவல்களை உடனடியாக அறிந்துகொள்ள வசதியாக இலவசமாக பாவிக்கக்கூடிய டயலொக் தொலைபேசி வசதியை டயலொக் நிறுவனத்தினர் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்துவைத்தார்.

இதேவேளை, இந்நிகழ்விற்கு முன்னர், மீன்பிடித் துறைமுகத்தினைப் பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த துறைமுகத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டறிந்ததுடன் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதன்போது, தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 150இற்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அதற்கு தற்போதைய இறங்கு துறை போதாமல் இருப்பதால் மிதக்கும் இறங்கு துறை ஒன்றை அமைப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் துறைமுக அதிகாரிகளினால் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7