சென்னையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இத்தாலி, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளிடமிருந்து பாடம் கற்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.
அத்துடன் சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஊரடங்கு உத்தரவை மக்கள் மிகக் கடுமையாக பின்பற்றியமையினால் பெருமளவு பாதிப்பு தடுக்கப்பட்டது.
ஆனால் இத்தாலியில் இவ்விடயத்தினை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. அதன் காரணமாகதான் அங்கு அதிகளவு பாதிப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.
இத்தகைய நிலைமைக்கு நாமும் ஆளாகிவிடக்கூடாது. அத்துடன் பொதுமக்களிடம் சுயக்கட்டுப்பாடு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது.
ஆகவே, கொரோனா வைரஸ் பாதிப்பினை உணர்ந்து மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.