மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 15 சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளன.
இதில் லிபரல் கட்சியின் வேட்பு மனுவும், இரண்டு சுயேச்சைக் குழுக்களான பெரியண்ணண் கணபதி ரவிச்சந்திரன் மற்றும் அப்துல் மனான் ஆகியோர் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அந்த வேட்புமனுக்கள் முறையாகப் பூர்த்திசெய்யப்படாமையின் காரணமாகவே நிராகரிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தேசிய மக்கள் சக்தி (மக்கள் விடுதலை முன்னணி), ஸ்ரீலங்கா சமாஜவாதி கட்சி, ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி, சோசலிஸ்ட் சமத்துவக் கட்சி, ஜனசெத்த பெரமுன, புதிய ஜனநாயக முன்னணி, லிபரல் கட்சி, அபே ஜனபலய மற்றும் பெரட்டுகாமி சமாஜவாதி ஆகிய கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்ததுடன் 15 சுயேட்சைக் குழுக்களும் தமது வேட்புமனுவை தாக்கல் செய்தன.