கிடங்கில் பற்றிய தீ பெரிய அளவில் கட்டுக்கடங்காமல் எரிந்துவருகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த 20இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கப் போராடிவருகின்ற நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்குள்ள மருந்துப் பொருட்கள் தயாரிக்கும் இரசாயன ஆலையில் மாலை 3.30 மணி அளவில் பற்றிய தீ சிறிதுநேரத்தில் பெரும் தீயாக எரிந்து வருகிறது.
ஆரம்பத்தில் 5 தீயணைப்பு வாகனங்கள் வந்தும் தீயை அணைக்க முடியவில்லை. இரசாயனப் பொருட்களும் எரிவதால் தண்ணீர் ஊற்றியும் அணைக்க முடியவில்லை.
தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதியில் தீயணைப்புத்துறை தலைமை அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகள், பொலிஸ் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் ஆணையர் தினகரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இந்நத தீவிபத்து குறித்து தீயணைப்புத் துறை தலைமை அதிகாரி சைலேந்திரபாபு தெரிவிக்கையில், “மருந்து தயாரிக்கும் இரசாயனம் என்பதால் விஷத்தன்மை இல்லை. அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் பயப்படத்தேவையில்லை.
இதேவேளை, மொத்தம் 26 தீயணைப்பு வாகனங்கள், 6 நுரை அடிக்கும் வாகனங்கள், மெட்ரோ தண்ணீர் லொறிகள், 500 தீயணைப்பு வீரர்கள் அதிகாரிகள் உள்ளனர். மேலும் 500 தீயணைப்பு அதிகாரிகள் வரவுள்ளனர். சில மணி நேரங்களில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம்” என்று தெரிவித்தார்.