23 அமைச்சர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஈரானில் தற்போது மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் நோயாளிகளுக்கான சுகாதார சேவைகளுக்கான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஈரானில் மூன்று இலட்சம் சுகாதார ஊழியர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட குழு நாடு தழுவிய ரீதியில் செயற்படுவதாக ஈரான் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஈரானின் கோமிலிருந்து வெளியேற முயற்சிக்கும் மக்கள் சிலருக்கு காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளமையினால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோமின் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கொரோனா பரவலை சமாளிக்க ஒரு வைத்தியசாலையை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, ஈரானில் இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதோடு, இரண்டாயிரத்து 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 435 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச ரீதியில் இதுவரை மூவாயிரத்து 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 92 ஆயிரத்து 862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.