எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச ரீதியில் இதுவரை மூவாயிரத்து 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 92 ஆயிரத்து 862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சீனாவில் நேற்று 38 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 2 ஆயிரத்து 981 ஆக உயர்வடைந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் சீனாவில் உயிரிழந்த 38 பேரில் 37 பேர் கொரோனாவின் மையமான ஹூபே மாகாணத்தில் உயிரிழந்துள்ளனர்.