மதவழிபாட்டுக்கூட்டம் ஒன்றில் ஏராளாமான மக்கள் பங்கேற்றுள்ளார்கள்.
அவர்களில் பலருக்கும் கரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 85 பேர் எல்என்ஜேபி மருத்துவமனைக்கும், 68 பேர் பிற மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்”
இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலீசார் இந்த மாதம் 1ம் தேதிமுதல் 15-ம் தேதி வரை டெல்லி நிஜாமுதீன் மேற்குப்பகுதியில் தப்லிக் இ ஜமாத் சார்பில் வழிபாட்டுக்கூட்டம் நடந்தது. இதில் இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள், உள்நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள். இதில் பங்கேற்ற பலருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதால் தெற்கு டெல்லி நிஜாமுதீன் பகுதி முற்றிலும் சீல் வைக்கப்பட்டுள்ளது
200 பேருக்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களைக் கண்டுபிடித்து பல்வேறு மருத்துவமனைகளில் சேர்த்துள்ளோம்” எனத் தெரிவித்தனர்.
டெல்லியில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 25 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது. மேலும் குறித்த வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை இருவர் பலியாகியுள்ளனர்
இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகத்தால் வெளியிடபட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது, புதிதாக 25 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 89 பேர் எல்என்ஜேபி மருத்துவமனை, ஜிடிபி மருத்துவமனை, ஆர்.எம்.எல் மருத்துவமனை, சப்தர்ஜங் மருத்துவமனை, ராஜீவ்காந்தி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.