செய்வதுதான் அரசின் பொறுப்பு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அனைவருக்குமான அரசு, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவர் மீதான நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படை இதுதான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் இன்று (சனிக்கிழமை) இடம்பற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “சமூகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நலன்களைப் பெறுவதையும், நீதியைப் பெறுவதையும் உறுதி செய்வது ஒவ்வொரு அரசின் முக்கியப் பொறுப்பாகும். அனைவருக்குமான அரசு, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவர் மீதான நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படை இதுதான்.
நாட்டில் உள்ள 130 கோடி மக்களுக்கும் சேவை செய்வதுதான் எனது அரசின் முன்னுரிமை. இதற்கு முன்பிருந்த அரசுகள் மாற்றுத்திறனாளி மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால், எனது தலைமையில், மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதைத் தீர்ப்பதற்கான வழிகளைத் தேடி அதைக் குறைத்துள்ளளோம்.
இதற்கு முந்தைய அரசுகள், சில நலத்திட்ட முகாம்கள் மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்காக அமைத்தனர். கடந்த 5 ஆண்டுகளில் நாடுமுழுவதும் ஏறக்குறைய 9 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கு முந்தைய அரசு ரூ.380 கோடிக்கு மாற்றுத்திறனாளிளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிலையில், எனது தலைமையிலான அரசு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.900 கோடிக்கும் அதிகமான உதவிகளை வழங்கியுள்ளது.
நிச்சயம் நாங்கள் அளித்த உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வலிமையான நம்பிக்கையை வழங்கும். உங்களின் உண்மையான பலம் என்பது பொறுமை, திறமை மற்றும் மதிநுட்பம்தான்.
கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் நாட்டில் நூற்றுக்கணக்கான சாலைகள், 700 ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்றவை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் முதன்முதலாக எனது அரசு சட்டம் இயற்றியது. இதன்மூலம் மாற்றுத்திறனாளிகள் பெறும் பலன்களின் அளவு 7 வீதத்திலிருந்து 21 ஆக அதிகரித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின் அளவு 3 முதல் 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது
முதியோர் நலனுக்காகவும் எனது அரசு உழைத்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே ‘ராஷ்ட்ரிய வயோஸ்ரீ யோஜனா’ எனும் திட்டத்தைச் செயற்படுத்தி ஏழை முதியோருக்குத் தேவையான உதவிகளை வழங்குகிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.