நேற்று (சனிக்கிழமை) வெளியான முடிவுகளின் படி, ஒன்ராறியோவில் 377 பேரும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 348 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆல்பேர்ட்டாவில் 226 பேர், கியூபெக்கில் 202 பேர், சஸ்காட்செவன்னில் 25 பேர், மனிடோபாவில் 17 பேரும் என நாடு முழுவதும் 1231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்பு பிரிட்டிஷ் கொலம்பியாவிலேயே பதிவாகியுள்ளதாகவும் அங்கு 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.