தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் மூன்று நோயாளிகள் இங்கிலாந்தில் ஏற்கனவே வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்களாக அறியப்படுவதாக தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விற்றி (Chris Whitty) கூறியுள்ளார்.
இதனிடையே, எசெக்ஸைச் சேர்ந்த ஒருவர் எவ்வாறு வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டார் என்பது கண்டறியப்படவில்லை. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதித்துள்ள ஏனைய எட்டுப் பேரில் ஆறு பேர் இத்தாலியில் இருந்து திரும்பியவர்கள் எனவும், இருவர் ஈரானில் இருந்து வந்தவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நோயாளிகள் லண்டன், வெஸ்ற் யோர்க்ஷயர் (West Yorkshire), கிரேற்றர் மன்செஸ்ரர் Greater Manchester, ஹெர்ட்ஃபோர்ட்ஷைர் Hertfordshire மற்றும் க்ளோசெஸ்ரர்ஷைர் (Gloucestershire) ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பேராசிரியர் விற்றி கூறியுள்ளார்.
இதேவேளை, உலகம் முழுவதும் 50இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை சுமார் 86,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 900ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.