இன்று செவ்வாய்க்கிழமை இவர்கள் நோய்த் தாக்கத்துக்கு உள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சின் உயர்மட்ட அதிகாரியான அச்சமட் யுரன்டோ (Achmad Yurianto) தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த நாட்களில் குறித்த வைரஸ் பாதிப்புக்கு உள்ளானதாக பதிவு செய்யப்பட்டவர்களில் இதுவே அதிக எண்ணிக்கை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்டு, இந்தோனேசியாவில் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளதுடன், இன்று செவ்வாய் கிழமை இருவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இந்தோனேசியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 30 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.