தொடர்ந்து வழங்க எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான சீன தூதுவர் செங் ஜுயுஆன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சீன தூதுவர் செங் ஜுயுஆன் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
அதாவது இலங்கைக்கான சீன தூதுவரின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் இலங்கைக்கான சீன தூதுவராக பணியாற்றியமையை கௌரவமாக கருதுவதாகவும் செங் ஜுயுஆன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனா அல்லல்பட்டபோது, இலங்கை அரசாங்கமும் மக்களும் வழங்கிய ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது விடைபெறும் சீன தூதுவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு வலியுறுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.