மஞ்சுபார்கவி என்ற பெண்ணை இரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், இது குறித்து யோகிபாபு விளக்கமளித்துள்ளார். எதிர்பாராத குடும்ப சூழல் காரணமாக அவசர நிலையில் திருமணம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் இதனால் யாருக்கும் முறைப்படி திருமண அழைப்பு கொடுக்க முடியவில்லை என்றும் அதனால் தனக்கு மிகுந்த வருத்தம் என்றும் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய குடும்ப சூழ்நிலையை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்று தான் நம்புவதாகவும் அனைவரின் வாழ்த்துக்களைப் பெற முடியவில்லை என்ற வருத்தம் தனக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் திருமணத்திற்கு யாரையும் அழைக்க முடியாவிட்டாலும் சென்னையில் வரும் மார்ச் மாதம் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைவரையும் முறைப்படி அழைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.