விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டதை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.
வழக்கறிஞர் ஹமித் கான் லாகூர் என்பவவே இவ்வாறு உயர் நீதிமன்றம் இரத்துச் செய்த தீர்ப்பை நிராகரிக்குமாறு நேற்று (செவ்வாய்க்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சுமார் 6 ஆண்டுகள் நடைபெற்ற தேசத்துரோக வழக்கின் முடிவில் கடந்த டிசம்பர் 17ஆம் திகதி பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் முஷாரப்புக்கு மரண தண்டனை விதித்தது.
நவம்பர் 2007இல் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக அவசரகாலநிலை பிரகடனம் செய்ததாக முஷாரப் மீது நவாஸ் ஷெரிப் தலைமையிலான அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில்தான் முஷாரப்புக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கு லாகூர் உயர் நீதிமன்றத்துக்கு மேன்முறையீட்டு விசாரணைக்கு வந்த போது ஜனவரி 13ஆம் திகதி, சிறப்பு நீதிமன்ற உருவாக்கமே அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று கூறி முஷாரப் மரண தண்டனை தீர்ப்பை இரத்துச் செய்து உத்தரவிட்டது.
இந்நிலையிலேயே இதனை எதிர்த்து குறித்த வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்துள்ளார், அவர் மேற்கொண்டுள்ள மனுவில், “லாகூர் உயர் நீதிமன்றம் மரண தண்டனையை இரத்துச் செய்ததன் மூலம் அரசியல் சட்டப் பிரிவு 6ஐ செல்லுபடியாகதாகச் செய்துவிட்டது. இதற்கு பாகிஸ்தான் அரசியல் சாசன வரலாற்றில் முக்கியத்துவம் உள்ளது” என்று கூறியுள்ளார்.
லாகூர் உயர் நீதிமன்றம் தனது மரண தண்டனை இரத்து உத்தரவில் கூறும்போது, “1976ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்ற குற்றச்சட்டத் திருத்தத்தின் படி அரசியல் சட்டத்துக்கு விரோதமான வகையில் சிறப்பு நீதிமன்றம் உருவாக்கம் நடந்துள்ளது. அரசியல் சட்டம் 6ஆம் பிரிவு என்பதற்குத் திருத்தம் அளித்து, அதன் மூலமாக அதற்கு முன்பாக நடந்த ஒன்றை தேசத்துரோகம் என்று கூற முடியாது” என்று கூறி மரண தண்டனையை இரத்துச் செய்தமை குறிப்பிடத்தக்கது.