மன்னிப்பின் அடிப்படையில் திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) திருகோணமலை சிறைச்சாலையின் அதிகாரி சமந்த லியனகேயின் தலைமையில் நடைபெற்றது.
சிறு குற்றங்கள் புரிந்த, தண்டப்பணம் செலுத்த முடியாத சிறைக்கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் திருகோணமலை சிறைச்சாலையின் அதிகாரி சமந்த லியனகே, அருள் வண்ணன், தயாகரன், பெரேரா சிறைச்சாலை பாதுகாவலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.