கொண்டுவர ஈரான் பலமாக வேண்டும் என ஈரானின் மூத்த மதத் தலைவர் அயதுல்லா அலி காமெய்னி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (சனிக்கிழமை) அவர் கூறுகையில், “எதிரிகளின் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் அளவிற்கும் போரை நிறுத்துவதற்கும் நாம் பலமாக வேண்டும்.
நாம் பலமாக இருந்தால் எதிரிகளின் அச்சுறுத்தல் முடிவுக்கு வரும். இதனால் போர் ஏற்படாததோடு நாங்கள் யாரையும் அச்சுறுத்தும் தேவையும் இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் போர் பதற்றம் இருந்துவருகின்றது. இந்நிலையில், கடந்த மாதம் முதல் வாரத்தில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி காசிம் சோலெய்மனி அமெரிக்காவால் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, ஈராக்கிலுள்ள அமெரிக்காவின் இராணுவத் தளங்கள் மீது ஈரானும் பதில் தாக்குதல் நடத்திய நிலையில் அமெரிக்கா – ஈரான் இடையேயான மோதல் வலுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.