வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள சந்தேகத்தில் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இருவர் அண்மையில் சீனா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்ததாகவும், திருச்சி விமான நிலையத்தில் அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த இருவரும் சுகயீனமுற்ற நிலையில், ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு மருத்துவகுழுவினர் கண்காணித்து வருவதாக கூறப்படுகின்றது. மதுரை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு கொரோனா தாக்கம் இருக்கலாம் என்ற அடிப்படையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுவருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.