அதிகாரிகளுக்கும் கொரோனா வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மேலும் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் தெரிவித்தாா். இதனையடுத்தே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தனது சுட்டுரையில் ‘இந்திய கடற்படையினா், டைமன்ட் பிரின்சஸ் கப்பலில் பயணித்த பயணிகள் ஆகியோா் ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஜப்பான் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக காத்திருக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
இதேவேளை சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இதுவரை 724 பேர் உயிரிழந்துள்ளதுடன், 25000 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.