செய்யப்படும் வெளிநாட்டினரை, திருப்பி அனுப்ப ரஷ்யா முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்துக்கொண்டே செல்கின்ற நிலையில், ரஷ்யாவின் பிரதமர் மிக்கைல் மிஷூஸ்டின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வதற்கான ‘தேவையான அனைத்து மருந்துகளும், பாதுகாப்பு வழிமுறைகளும் உள்ளன’ என்றும் கூறினார்.
ரஷ்யாவில் இதுவரை 2 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவருமே சீனாவைச் சேர்ந்தவர்கள், சைபீரியாவில் உள்ள சிட்டா நகர மருத்துவமனைகளில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிர்களை காவுக் கொண்டுவரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, சீனாவுடனான எல்லையை ரஷ்யா மூடியுள்ளது.
அத்தோடு, சீன குடிமக்கள் தூர கிழக்கு மற்றும் மேற்கு ரஷ்யாவின் சில பகுதிகளுக்குள் செல்ல உதவும் மின்னணு விசாக்கள் வழங்குவதையும் நிறுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி நேற்று (திங்கட்கிழமை) மாலை வெளியிடப்பட்டதன் அடிப்படையில் இதுவரை, 425 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.