பாதிக்கப்பட்ட 60 வயதான அமெரிக்க பிரஜை ஒருவர் சீனாவின் வுஹானில் உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் ஏற்பட்ட முதலாவது சீனப் பிரஜை அல்லாத ஒருவரின் உயிரிழப்பாக இது பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், வூஹான் வைத்தியசாலையில் 60 வயதான ஜப்பான் பிரஜை ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
எனினும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வது கடினம் என ஜப்பான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 81 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
தற்போது அந்த வைரஸ் 25 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உள்ளது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
உலக அளவில் குறித்த கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மொத்தமாக 724 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.