இருந்து பிரித்தானியப் பிரஜைகள் அனைவரையும் வெளியேற வேண்டும் என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
வைரஸ் பாதிப்புக்குள்ளான ஹூபே மாகாணத்திலிருந்து பிரித்தானியர்களை வெளியேற்றுவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
வைரஸால் பாதிப்பு அபாயத்தை குறைக்க சீனாவில் உள்ள பிரித்தானியப் பிரஜைகள் விரைவாக நாட்டை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்துகிறோம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.
ஹூபே மாகாணத்தில் இருந்து வெளியேற விரும்பும் பிரித்தானியப் பிரஜைகளுக்கு உதவுவதற்கு நாங்கள் தொடர்ந்து பணியாற்றிவருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகநாடுகளில் 20,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நோய்ப் பாதிப்பினால் சீனாவில் 400 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.