உதயங்க வீரதுங்கவை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது அவரை மார்ச் 11 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
மிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட உதயங்க வீரதுங்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இம்மாதம் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.