வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்தேன். அமைதி மற்றும் சகஜ நிலை திரும்ப பொலிஸ் மற்றும் பல அமைப்புகள் களத்தில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.
அமைதியும் நல்லிணக்கமுமே நமது நெறிமுறைகளுக்கு மையமாக உள்ளது. அனைத்து நேரங்களிலும், அமைதி மற்றும் சகோதரத்துவத்தை தொடர வேண்டும் என டெல்லியில் உள்ள எனது சகோதர, சகோதரிகளை கேட்டு கொள்கிறேன்.
அமைதி மற்றும் சகஜ நிலையை விரைவில் கொண்டு வருவது இந்த நேரத்தில் முக்கியமானது” என அந்த பதிவில் மோடி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.