என்றும் தொற்றுநோய் பரவுவது அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலகளவில், 80,000 க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2,800 பேர் இறந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் உருவாகிய சீனாவின் ஹூபே மாகாணத்திலேயே பெரும்பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
சீனாவில் 78,824 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,788 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று 27 ஆம் திகதி 327 புதிய நோயாளிகள் இனங்காணப்பட்டதுடன் 44 பேர் உயிரிழந்தனர் என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவில் 571 புதிய நோயாளிகள் உட்பட கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,337 ஆக உள்ளது என யோன்ஹப் செய்தி நிறுவனம் (Yonhap news) தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதால் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன.
ஆப்பிரிக்காவின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான நைஜீரியாவில் முதலாவது நபருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானின் பிரதான தீவுகளின் வடக்கே உள்ள ஹொக்கைடோவில் தொற்றுநோயின் வேகம் அதிகரித்துள்ளதால் அங்கு அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் 200 க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதுடன் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. 700 பேருக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
மொங்கோலியாவின் ஜனாதிபதி பற்ருல்கா கல்ற்மா(Battulga Khaltmaa) சீனாவிற்கு விஜயம் செய்த பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
சீனாவிலிருந்து நாடு திரும்பிய ஜனாதிபதி மற்றும் மங்கோலிய அதிகாரிகள் 14 நாள் தனிமைப்படுத்தலில் உள்ளதாக அரச செய்தி நிறுவனமான மொன்சேம் (Montsame) இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மொங்கோலிய ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்து சீனாவின் தலைவர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கெகியாங் ஆகியோருடன் சந்திப்புகளை நடத்தினர்.