தொற்று தங்கள் நாட்டுக்குள் பரவாமல் இருக்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சீனாவிலிருந்து வருபவர்களை நாட்டுக்குள் நுழைய சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.
இந்த தடை உத்தரவினை மீறும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சவுதி அரேபியா தனது குடிமக்களுக்கு சீனாவுக்குச் செல்ல தடைவிதித்துள்ளதுடன், தடையை மீறிய யாரேனும் அதிகாரிகளிடம் சிக்கினால், அவர்களின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்யப்படும் என்று சவூதி அரேபியாவின் குடியுரிமைத் துறை எச்சரித்துள்ளது.
சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு அமெரிக்கா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 15 நாடுகள் சில வகையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், 16ஆவது நாடாக சவுதி அரேபியா இணைந்துள்ளது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 636ஆக அதிகரித்துள்ளது. நேற்று மாத்திரம் 73 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், புதிதாக 3,141 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றினால் இதுவரை 31,161 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.