அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு வருபவர்களும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அறிகுறிகளைக் காண்பிப்பது உட்பட சந்தேகத்திற்கிடமான அனைத்து நிகழ்வுகளையும் கண்டறிய விமான நிலையத்தில் வெப்ப ஸ்கானர்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
நாட்டில் இதுவரை ஒருவர் மட்டுமே கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு மேலும் 20 பேர் வைரஸ் பாதிப்பிற்குள்ளான சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன் அவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்தார்.
இதேவேளை சமீபத்தில் சீனாவின் வுஹானில் இருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்களுக்கு வைரஸின் எந்த அறிகுறியும் இல்லை என்பதை சுகாதார அமைச்சரும் இன்று உறுதிப்படுத்தினார்.
மேலும் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் குறைந்தது ஒரு மாதமாவது நீடிக்கக்கூடும் என்றும் அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கூறியுள்ளார்