கோட்பாட்டை பேனாவின் ஊடாக பெற்றுக்கொள்ள கூட்டமைப்பு முயற்சிப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டத்தில் கெஹெலிய ரம்புக்வெல மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதியாக தமிழ் தேசியக்கூட்டமைப்பை மக்கள் ஏற்கவில்லை.
சம்மந்தன், சுமந்திரன் தமிழ் மக்களின் நாயகன் தான் என்று கூறுவார்களாயின் அது மிகப்பெரிய பொய். அவர்கள் அப்பாவி தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.
கடந்த 2004- 2005 யுத்த காலப்பகுதியில் பிரபாகரனுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியவர்கள் இவர்கள்தான்.
அதாவது நாடாளுமன்றத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை பிரபாகரனுக்கு அப்போதே தெரியப்படுத்தும் விதமாக ஒலிப்பதிவு செய்தல் மற்றும் தொலைபேசியை அழைப்பை ஏற்படுத்தியவர்கள்.இப்படியான சம்பவங்கள் இடம்பெற்ற நாடுதான் எமது நாடு
யுத்தத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாமல் போன தனி தாயக கோட்பாட்டை பேனாவின் ஊடாக பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் தற்போது செயற்படுகின்றனர்.
இதனால்தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்த நாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம், என அனைவரும் ஒன்றாக வாழ முடியும்.
அதாவது ஒரேநாடு, ஒரே கொள்கை என்ற கருத்துக்கமைய அனைவரும் செயற்பட வேண்டுமென்பதில் அவர் தெளிவாக இருக்கின்றார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில், நாமும் எங்கள் நிலையைப் பயன்படுத்தி வெற்றிப்பெறுவோமென இனவாதிகள் கூறினர். ஆனால் மக்கள் அனைவரும் நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரு தலைமை எங்களிடம்தான் இருந்தது.
மேலும் வாக்குகளுக்காக இனவாதிகளிடம் நாம் அடிப்பணியவில்லை. நாட்டின் மீதும் மக்கள் மீதும் எமக்கு எப்போதும் நம்பிக்கை இருக்கின்றது.
இதேவேளை பிரபாகரனினால் உருவாக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் காணப்படும் இனவாத அமைப்புகளினாலேயே குறித்த பகுதியில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றார்.
எனினும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இனவாதத்தை தோற்கடித்து, நாம் வெற்றி பெற்றோம். இதேபோன்று எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் இனவாதிகளை முழுமையாக தோற்கடிப்பதற்கு மக்கள் அனைவரும் எம்முடன் இணைய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.