ஏற்பட்டுள்ளதாக ஒன்ராறியோ சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குயின்ஸ் பூங்காவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஒன்ராறியோவின் சுகாதாரத் தலைமை மருத்துவ அதிகாரி டொக்ரர் டேவிட் வில்லியம்ஸ், ஒன்ராறியோவின் இணை தலைமை மருத்துவ அதிகாரி டொக்ரர் பார்பரா யாஃப் மற்றும் ரொறன்ரோவின் சுகாதார மருத்துவ அதிகாரி டொக்ரர் எலைன் டி வில்லா ஆகியோர் இதனை வெளிப்படுத்தினர்.
இதன்போது, 20 வயதான டி வில்லா எனும் பெண்னுக்கு கொரோனா வைராஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
சீனாவிலிருந்து கனடா வந்த குறித்த பெண், கடந்த வெள்ளிக்கிழமை ரொறன்ரோவில் உள்ள நோர்த் யோர்க் பொது மருத்துவமனைக்கு இருமலுடன் சென்ற வேளையிலேயே அவருக்கு, வைராஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவர் கடந்த ஜனவரி மாதம் சீனாவுக்கான அந்தப் பயணத்தில், ஹூபே மாகாணத்திற்கும் குறிப்பாக வுஹானுக்கும் சென்றதாகத் தெரியவந்துள்ளது.
தற்போது, டி வில்லா தனிமைப்படுத்தலுக்காக வீட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும், அவரைக் கண்காணித்து வருவதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.