தவறிவிட்டது என்றும் இதற்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவானவர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையே கடந்த 3 நாட்களாக மோதல் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா உள்ளிட்ட 3 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த சூழலில் டெல்லியில் அமைதியைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியும், வன்முறைக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பேரணி நடந்தது. இந்தப் பேரணியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இந்த பேரணியில் கருத்து தெரிவித்த பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைதியையும், சகோதரத்துவத்தையும் உணர்த்த வேண்டும் என வலியுறுத்தினார்.