நிறுவனங்களுக்கும், சொத்து வரி நிவாரணம் வழங்க உள்ளூர் அரசாங்கங்களை அனுமதிக்கும் வகையில் புதிய இடைக்கால திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சொத்து மதிப்புகள் உயர்ந்து வருவதால் அதிக குத்தகைக்கு போராடும் வணிகங்கள், இலாப நோக்கற்ற மற்றும் கலை மற்றும் கலாசார இடங்களுக்கு உதவுவதே இந்த நடவடிக்கை என்று நகராட்சி விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சர் செலினா ராபின்சன் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், பிரிட்டிஷ் கொலம்பியர்களுக்கு வாழ்க்கையை மிகவும் இலகுபடுத்த தாங்கள் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நகராட்சியால் தீர்மானிக்கப்பட்ட அளவுருக்களின் தொகுப்பிற்குள், பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கான சொத்து வரியின் ஒரு பகுதிக்கு விலக்களிக்க நகராட்சிகள் சட்டப்படி செயற்படுத்த அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.