ஆட்சியமைக்கும் என அம்மாநிலத்தின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் தற்போது நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வாக்கினை பதிவு செய்தார். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “பெண்கள் பெருமளவில் வந்து தங்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும். இளைஞர்கள் வாக்களிப்பதால் ஜனநாயகம் வலிமையடையும்.
ஐந்து ஆண்டுகாலம் நாங்கள் ஆற்றிய பணிகளின் அடிப்படையில் மக்கள் வாக்களிப்பார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. டெல்லியில் மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என நம்புகிறேன்“ எனத் தெரிவித்துள்ளார்.