
இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது வரையில் 425 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20,400 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு அண்டை மாநிலமான கேரளத்தில் மூன்று பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழக மற்றும் கேரள எல்லையில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லை என்றும் 21 பேரை பரிசோதித்ததில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன என்றும் புனேவுக்கு பின்னர் தமிழ்நாட்டில்தான் கொரோனா வைரஸ் சோதனை வசதி உள்ளது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
